"ஏம்மா உனக்கு மாதவிலக்கு முடிஞ்சிடுச்சா "கஸ்டமர் முன்பு பெண்ணை கொச்சையா பேசிய கடை முதலாளிக்கு நேர்ந்த கதி

 
rape

வாடிக்கையாளர் முன்பே , மாதவிடாயை பற்றி பேசி அசிங்கப்படுத்திய முதலாளி மீது ஒரு பெண் வழக்கு போட்டு பல லட்சம் பெற்றார்  

rape

இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் எம்பார்க் ஆன் ரா என்ற செல்லப்பிராணிகளுக்கான உணவுக் கடையில் விற்பனையாளராக பணியாற்றுபர் 54 வயதான  லீ பெஸ்ட்  திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறார் 
இவர் ஒருமுறை இவர் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அவருக்கும் அவரது முதலாளியான டேவிட் பிளெட்சர் என்பவருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது "உனக்கு இந்நேரம் மாதவிடாய் முடிந்திருக்கவேண்டுமே ,முடிஞ்சிருச்சா " என்று வாடிக்கையாளர்கள் முன் அந்த பெண்ணிடம் கத்தி கூச்சலிட்டுள்ளார்.அடுத்து அந்த பெண்ணை ஆபாசமாக திட்டியுள்ளார் .இது பற்றி அந்த பெண் கடை முதலாளியின் மனைவியிடம் புகாரளித்தபோது அவர் வேலையை விட்டு நீக்கிவிட்டார் .உடனே  அந்த பெண் அந்த கடை முதலாளி மீது கோர்ட்டில் வழக்கு போட்டார் 
பெண்ணை அவரது வயது மற்றும் பாலின பாகுபாடு மற்றும் நியாயமற்ற பணிநீக்கம் செய்த குற்றத்திற்காக பிளெட்சர், பாதிக்கப்பட்ட ஊழியர் லீ பேஸ்டுக்கு 20,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.