"நர்ஸ் எனக்கு கக்கூஸில் குழந்தை பிறந்திருக்கு" -அலறிய பெண் -டாய்லெட்டுக்குள் சிக்கிய குழந்தை வீடியோ

 
baby leg baby leg

பெண் ஒருவர் கழிவறையை பயன்படுத்தும் போது திடீரென குழந்தையைப் பெற்றெடுத்தார். மலம் கழிக்க சென்ற அவருக்கு கழிப்பறையில் பிரசவம் ஆகியுள்ளது. 

பகீர் வீடியோ: கழிப்பறையில் பிரசவம்; டாய்லெட்டில் சிக்கிய குழந்தை
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மேம்பாட்டு இல்லத்தில் வசித்து வந்த ஒரு நிறை மாத கர்ப்பிணி பெண்ணொருவர் மலம் கழிக்க அங்குள்ள வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு சென்றார் 
அப்போது மனநிலை சரியில்லாத இந்த பெண் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த பிரசவத்தில் பிறந்த குழந்தை டாய்லெட்டில் சிக்கிக்கொண்டது.  இது குறித்து தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு இல்லத்தை சேர்ந்தவர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து குழந்தையை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.அவர்கள் முயற்ச்சியால்  குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது 
முதற்கட்ட பரிசோதனையின் பின்னர் தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனநிலை சரியில்லாத இந்த பெண் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.