"தினமும் வீடியோ காலில் நிர்வாணமாக நில்லு.." -மிரட்டிய கள்ள காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

 
video call video call

பணத்தை ஏமாற்றி ,தினமும் வீடியோ காலில் நிர்வாணமாக வர சொல்லி மிரட்டிய கள்ள காதலனால் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார் 

திருச்சி மாவட்டம் குமுளூரைச் சேர்ந்த 45 வயதான  பாலசுப்ரமணியன் என்பவருக்கு மீனா என்ற மனைவியும், 2 மகன் ஒரு மகள் உள்ளனர். அவர்  குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். இந்நிலையில்  அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் மீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

suicide
ஒரு கட்டத்தில் சுரேஷுக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் ஆசை ஏற்பட , கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணத்தில் 2 லட்சம் ரூபாய் வரை செலவழித்து சுரேசை மீனா வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்.  பின்னர் வெளிநாட்டில் இருந்த சுரேஷ் மீனாவை மிரட்டி நிர்வாணமாக நின்று வீடியோ கால் பேச கட்டாயப்படுத்தியுள்ளார் . ஆரம்பத்தில் அப்படி பேசிய மீனா, பிறகு அவருடனான தொடர்பை துண்டித்து  கொண்டார்.
பிறகு  மீனா தான் கொடுத்த 2 லட்ச ரூபாய் பணத்தை வசூலிக்க முடிவெடுத்து சுரேஷின் பெற்றோர் வீட்டிற்கு சென்று சுரேஷ் வெளிநாடு செல்ல தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.
ஆனால் சுரேஷ் குடும்பத்தினரோ மீனாவை நடுரோட்டில் வைத்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டனர். இதனால் அவமானம் தாங்காத மீனா தனது வீட்டுக்கு சென்று கடந்த மாதம் 20ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய அப்பெண்ணின்  கணவர் பாலசுப்ரமணியன் தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலையை பார்த்து, மனைவியின் போனிலிருந்த இந்த ஆபாச வீடியோக்களை காமித்து போலீசில் புகார் தந்தார் . போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.