இதுக்கெல்லாமா கொலை பண்ணுவாங்க... பெரியப்பாவை கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்

மதுராந்தகம் அருகே ஊதாரித்தனமாக சுற்றித்திரிந்த இளைஞரை தட்டி கேட்ட பெரியப்பாவை கட்டையைக் கொண்டு அடித்து கொன்ற இளைஞர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த ஒரத்தி SS பிளாட் தனியார் குடியிருப்பு பகுதியில் பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி ஜமுனா ராணி வசித்து வருகின்றனர். ஜமுனா ராணியின் தங்கையான மஞ்சுளா இவரும் இவரது கணவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் இறந்துள்ளனர் அவர்களுடைய மகனான சூர்யா வயது 19 என்பவர் தன் பெரியம்மாவாகிய ஜமுனா ராணியுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே சுற்றி திரிந்து வருவதைக் கண்டிப்பதால் அவரது பெரியப்பாவாகிய பிரகாசிக்கும் சூர்யாவுக்கும் அடிக்கடி சண்டை வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இருவருக்கும் நேற்று இரவு சண்டையானது அதிகமானதால் மது போதையில் இருந்த சூர்யா தன் பெரியப்பா பிரகாஷை கட்டையைக் கொண்டும் கத்தியை கொண்டும் தலையில் பலமாக தாக்கியுள்ளார் இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு அச்சரப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலே பிரகாஷ் உயிரிழந்து உள்ளார். தகவல் அறிந்து வந்த ஒரத்தி காவல்துறையினர் சூர்யாவை கைது செய்து பிரகாஷை தாக்கிய கட்டை கத்தி ஆகியவற்றை கைப்பற்றினர் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட வருகின்றனர் இச்சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது