கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்த மனைவி! மாமியரை வெட்டிக் கொன்ற கணவர்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் ஒரே வீட்டில் தாய், மகள் வெட்டி கொலை செய்யப்ப்டட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த லோடுமேன் பசுபதி (38) இவரது மனைவி சுகன்யா (35). இவருக்கு திருமணமாகி 9ம் வகுப்பு படிக்கும் மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பசுபதி அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவி குழந்தைகளிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் பலமுறை சுகன்யா கோபித்து கொண்டு அருகில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விடுவார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சுகன்யா கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகளை அழைத்து கொண்டு மதுரையைச் சேர்ந்த போலீஸ்காரருடன் மாயமாகி விட்டார். இதற்கு மாமியார் பாண்டிலட்சுமி (52), தான் காரணம் என பசுபதி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
சுகன்யா எங்கு சென்றார் என யாருக்குமே தெரியவில்லை. இந்நிலையில் இன்று மதியம் மூன்று மணிக்கு மாமியார் பாண்டிலட்சுமி வீட்டிற்கு சென்று தகராறு செய்த பசுபதி, அங்கிருந்த அரிவாளை எடுத்து மாமியாரை சராமாரியாக வெட்டி கொலை செய்தார். சத்தம் கேட்டு தடுக்க வந்த பாண்டிலட்சுமியின் 80 வயது தாயார் சொர்ணவள்ளியையும் சராமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பினார். கொலை செய்யப்பட்ட இருவரின் உடலையும் திருப்பாச்சேத்தி (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் கைப்பற்றி பசுபதியை தேடி வருகின்றனர். சிவகங்கையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். திருப்பாச்சேத்தி போலீசார் கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளை கைப்பற்றினர். ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்ப்டட சம்பவம் திருப்பாச்சேத்தி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.