• July
    20
    Saturday

Main Area

Main



எங்களுக்கு டேட்டிங் தான் முக்கியம்... ஆன்லைனில் அடம்பிடிக்கும் இந்தியர்கள்..!

Dating
Dating
Loading...

இந்தியாவில் ஆன்லைனில் திருமண வரன் தேடுபவர்களை விட “டேட்டிங்” செல்ல ஜோடியை தேடுபவர்களின் எண்ணிக்கையே அதிகரித்திருப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

dating

கூகுள் நிறுவனத்தின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் டேட்டிங் தொடர்பான விவரங்களை தேடியவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் திருமணத்திற்காக அதாவது மேட்ரிமோனி தொடர்பான தேடிதல் விவரங்கள் வெறும் 13 சதவீதமே உயர்ந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே போல ஆன்லைனில் உணவு தொடர்பான தகவல்களை தேடுபவர்களின் எண்ணிக்கையும் 2018-ம் ஆண்டில் இரட்டிப்பாகி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுவும் இந்தியர்கள் பீட்சா உணவையே அதிகம் தேடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது 

indians

எத்தகைய வீடியோக்களை இளைஞர்கள் அதிகம் பார்க்கின்றனர் என்ற ஆய்வும் நடத்தப்பட்டது. அதில் இந்திய இளைஞர்கள் 33 சதவீத பேர் பொழுதுபோக்கு தொடர்பான வீடியோக்களையும் 80 சதவீத பேர் புதிய வாகனங்கள் மற்றும் வாகனங்களின் பயன்பாடு குறித்த தேடுதலிலுமே ஆர்வம் காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.