• July
    18
    Thursday

Main Area

Main



பாரதிய ஜனதா இல்ல! பீஃப் ஜனதா!! மோடியின் பதவியேற்பை விரும்பாத ஹேக்கர்கள்!!

beaf
beaf
Loading...

மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை விரும்பாத ஹேக்கர்கள் மோடி பதவியேற்பு விழாவின் போது பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஹேக் செய்துள்ளனர்.


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து, பெரும் வெற்றி பெற்றது பா.ஜ.க. இதனால் இரண்டாவது முறையாக பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றார் நரேந்திர மோடி. பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. மோடியுடன் இணைந்து 58 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

beef

இந்நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசையும், மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றதையும் விரும்பாத ஹேக்கர்கள் பாரதிய ஜனதா கட்சியின் இணையதளத்தை ஹேக் செய்துள்ளனர். இணையதளத்தின் முகப்பு பக்கத்திலிருந்து மோடி மற்றும் அமிஷ்ஷாவின் புகைப்படங்களை எடுத்துவிட்டு அந்த இடத்தில் மாட்டிறைச்சி புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி Bharatiya Janata Party என்பதை Beef Janata Party என மாற்றியுள்ளனர். மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என அனைத்து பக்கங்களையும் மாற்றியுள்ளனர். பதவியேற்பு விழாவில் பிஸியாக இருந்த பாஜகவினர் சிறிது நேரம் கழித்து இணையதளத்தை பார்த்துள்ளனர். உடனடியாக அதிர்ச்சியடைந்த அவர்கள், கைத்தேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு இணையதளத்தை சரிசெய்தனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.