• July
    16
    Tuesday

Main Area

Main



துப்பாக்கியுடன் டிக் டோக்: 19 வயது இளைஞர் பரிதாப பலி!

சல்மான்
சல்மான்
Loading...

புதுடெல்லி: துப்பாக்கியை வைத்து டிக் டோக் வீடியோ செய்ததில் எதிர்பாராத விதமாக  துப்பாக்கி வெடித்ததால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டிக் டோக்கிற்கு  அடிமையாகி வரும் இளையதலைமுறை 
tiktok

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஆஃப் டிக் டோக் . இதில் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக உள்ளது. பாடல்களுக்கு ஏற்ப வாயசைப்பது, நடனம் ஆடுவது, குறிப்பிட்ட வசனத்தை பேசுவது  என இளைஞர்கள்  முதல் பெரியவர்கள் வரை டிக் டோக்  ஆப்பில்  நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில்,  பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, டிக் டோக்கிற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். மேலும், ஆபாசமான வீடியோக்கள் பலவும் இதில் உலாவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு டிக் டோக்

 

gun

இந்நிலையில்  டெல்லியை சேர்ந்த  19 வயதான  சல்மான் என்ற இளைஞரும் அவரது நண்பரும்  காரில் டிக் டோக் வீடியோ செய்துள்ளனர். அப்போது  தங்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு சல்மானை நோக்கி அவரது நண்பர் டிக் டோக் வீடியோவுக்காக சுடுவது போல நடித்துள்ளார். இதில் தவறுதலாகத் துப்பாக்கி வெடித்து விடவே சல்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில்,  மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது சல்மான் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்ட அவரது நண்பர்களும், உறவினர்களும் கதறி அழுதனர். 

கொலை வழக்குப்பதிவு
delhi

இதை தொடர்ந்து சல்மானின் நண்பர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.  முன்னதாக கையில் கத்தியை வைத்துக் கொண்டு டிக் டோக் செய்த  இளைஞர், தனது நடன அசைவுகளின் போது, எதிர்பாரா விதமாகத் தனது கழுத்தை அறுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: ஸ்ரீதேவி மகனை மணக்கும் 45 வயது பாலிவுட் நடிகை!? என்ன சொல்கிறார் மலைக்கா

2018 TopTamilNews. All rights reserved.