திருப்பதியில் 12 மணிநேரம் நடை அடைப்பு..!! எப்போன்னு தெரியுமா??

 
 திருப்பதி

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தியொட்டி திருப்பதியில் 12 மணி நேரம் நடை  அடைக்கப்படுகிறது.  

தீபாவளிக்கு  மறுநாளான  வருகிற 25-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது.  அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது.  வருகிற 25-ந் தேதி அமாவாசை நாளான அன்று   மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது.  இதனால் அன்றைய தினம் திருப்பதியில்  காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் நடை  மூடப்பட்டிருக்கும். பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் பிற ஆர்ஜித சேவைகள் என அனைத்தும்  ரத்து செய்யப்பட்டு,  சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

சூரிய கிரகணத்தின் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும்

இதேபோல்  நவம்பர் மாதம்  8-ந் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது.  இதனால் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும். அப்போது பிற அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு,  சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை உணவுகள் சமைக்கப்படாது.   

சந்திர கிரகணம்

அதன்படி திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனில், வைகுந்தம் கியூ வளாகத்தில் அன்னதானம்  வழங்கப்படாது. எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு  திட்டமிட்டு திருமலைக்கு வரவேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவிவித்துள்ளனர்.