இந்த வார முக்கிய நிகழ்வுகள்... பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை!

 
Maha Shivratri

பிப்ரவரி 28ம் தேதி (திங்கட்கிழமை) முதல் மார்ச் 6ம் தேதி வரையிலான ஒரு வாரக் காலத்தில் வர உள்ள சிறப்பு நாட்கள், சுப முகூர்த்தங்கள், சந்திராஷ்டமம், திருவிழாக்கள் பற்றிய தொகுப்பைக் காண்போம்...

பிப்ரவரி 28, மாசி16  , திங்கட்கிழமை:

பிரதோஷம். திருவோண விரதம். திருவைக்காவூர் சிவபெருமான் சேஷ வாகன பவனி. சந்திராஷ்டமம்: திருவாதிரை

மார்ச் 1, மாசி 17, செவ்வாய்க்கிழமை:

மகா சிவராத்திரி, கரிநாள். இன்று சுப காரியங்கள் செய்யக் கூடாது. சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

மார்ச் 2, மாசி 19, புதன் கிழமை:

சர்வ அமாவாசை. துவாபர யுகாதி, கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம். சந்திராஷ்டமம்: பூசம்.

மார்ச் 3, மாசி 20, வியாழக்கிழமை:

காளஹஸ்தி, திருக்கோகர்ணம், திருவைக்காவூர், ஶ்ரீசைலம் உள்ளிட்ட சிவபெருமான் தலங்களில் திருக்கல்யாணம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சந்திராஷ்டம்: ஆயில்யம்.

மார்ச் 4, மாசி 21, வெள்ளிக்கிழமை:

சுப முகூர்த்த நாள். சந்திர தரிசனம். சந்திராஷ்டமம்: மகம்.

மார்ச் 5, மாசி 22, சனிக்கிழமை:

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சனம். சந்திராஷ்டமம்: பூரம்.

மார்ச் 6, மாசி 23, ஞாயிற்றுக்கிழமை:

சதுர்த்தி விரதம். வாஸ்து நாள். காலை 10.32ல் இருந்து 11.08 வரை வாஸ்து செய்ய ஏற்ற நேரம். திருவைக்காவூர் சிவபெருமான் பவனி. சந்திராஷ்டமம்: உத்திரம்.