• July
    19
    Friday

Main Area

Main



கட்சியைக் கலைக்கிறார் டி.டி.வி.தினகரன்..?

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்
Loading...

தேர்தலுக்கு முன் சிங்கமாக கர்ஜித்தவர், ரிசல்டிற்கு பிறகு சோர்ந்து போய் விட்டார் டி.டி.வி.தினகரன். தேர்தலில் அவர் வாங்கிய பலமான அடி அவரது அடுத்த கட்டத்தை கேள்விக் குறியாக்கி இருக்கிறது. sasikala

அவர் அமமுகவை கலைக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது.  இதுகுறித்து அமமுக தரப்பில் பேசினால், ‘’அப்படி ஒரு முடிவு இல்லை’’ எனத் தெரிவிக்கின்றனர். இப்போதைக்கு கட்சியை அறிக்கை, டிவிட்டர் மூலம் நடத்த டி.டி.வி.தினகரன் முடிவு செய்து இருக்கிறார்.sasikala

அந்த அளவுக்கு பைனான்ஸ் நெருக்கடி முற்றி விட்டது. இனிமேலும் பணம் கொடுத்து மற்ற கட்சியினரை இழுக்க முடியாது என்று கைவிரித்துவிட்டார். தன்னை நம்பி வந்த தகுதி இழந்தவர்களையும் கழட்டிவிட்டுட்டார். அதில் வசதி படைத்தவர்கள் மட்டும் தினகரனிடம் பணம் கேட்பதில்லை. மற்றவர்கள் அதை எதிர்பார்த்து வந்ததால் பணம் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கிறார்கள். sasikala

சசிகலா சிறையில் இருந்து வந்தால்தான் கட்சி இருக்குமா? இல்லை... கலையுமா? என்பது தெரியவரும். காரணம், அவர் தொடர்ந்துள்ள மூல வழக்கு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதனால் அவர் வரும் வரை நிர்வாகிகளை ஒன்றிணைக்க கட்சியை பயன்படுத்துவார். பிறகு நிலைமை மாறலாம் என்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.