• July
    22
    Monday

Main Area

Main



சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கச் சொன்னதே சசிகலாதானாம்...இதெப்படி இருக்கு?

சசிகலா - தினகரன்
சசிகலா - தினகரன்
Loading...

சென்னை:  அ.ம.மு.க.வின் அவசரக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை டி.டி.வி. தினகரனே வைத்துக்கொள்ளும் டிராமாவின் இயக்குநரே சசிகலாதான் என்றும், டி.டி.வி. சசியின் அனுமதியின்றி எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவதில்லை என்றும் அக்கட்சி வட்டாரங்கள் அடித்துக் கூறுகின்றன.

ttv

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரை அழைத்து இன்று (ஏப்ரல் 19) பிற்பகல் சென்னையில் அவசரக் கூட்டம் நடத்துகிறார்.மக்களவைத் தேர்தல், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நேற்று முடிந்த நிலையில் நேற்று இரவு கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உடனடியாக சென்னை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

sasi

 ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும், சட்டமன்றத் தொகுதியிலும் பதிவான வாக்கு விவரங்கள், அவற்றில் அமமுகவுக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் ஆகியவை பற்றி விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்படுவதாக தெரிகிறது. அதேநேரம் அ.ம.மு.க.வை கட்சியாகப் பதிவு செய்வது என்றும், அமமுகவின் பொதுச் செயலாளராக தினகரனை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கவுமே இன்றைய கூட்டம் என்றும் அமமுக வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கிறார்கள். 

gift

உச்ச நீதிமன்றத்தில் பரிசுப்பெட்டி சின்னம் வாங்குவதற்காக நடந்த வழக்கு விசாரணையில், பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொது சின்னம் கிடையாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில் ’கூடிய விரைவில் கட்சியை பதிவு செய்துவிடுகிறோம்’ என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் உறுதியளித்திருந்தார்.

ttv

இக்கூட்டத்தின் மூலம்  அமமுக கட்சிக்கு பொதுச் செயலாளராக ஆகும் முடிவிலும் இருக்கிறார் தினகரன். இதையொட்டி சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது போலவும் அண்மையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தினாரே தவிர சசிகலாவை முன்னிலைப்படுத்தவே இல்லை என்றும் பரபரப்பான தகவல்கள் பரவியுள்ளன.இந்நிலையில் நடப்பது அத்தனையும் சசிகலா நடத்தும் நாடகமே என்றும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இன்னும் தன்னை நினைத்துக்கொண்டுள்ள ஒருவர், அதாவது சசிகலா,  ஏன் அ.ம.மு.க. போன்ற ஒரு தற்காலிக கட்சிக்கு பொதுச் செயலாளராகவும் இருக்க விரும்பவேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கூட்டிக் கழிச்சிப் பார்த்தா குழப்பமாதாங்க இருக்கு.

இதையும் வாசிக்க: எப்போது தேர்தல் நடந்தாலும் எதிர்கொள்ள தயார்; ரஜினி தடாலடி!

2018 TopTamilNews. All rights reserved.