• July
    18
    Thursday

Main Area

Main



விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்’ படத்தில் அவரது மகன் சூர்யா இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருக்கக்கூடாது...

கோப்புப்படம்
கோப்புப்படம்
Loading...

’விஜய் சேதுபதி எட்டடி பாய்ந்தால் அவரது மகன் சூர்யா பதினாறு அடி பாய்ந்திருக்கிறார்’ என்கிறார் ’சிந்துபாத்’ படத்தின் இயக்குநர் அருண்குமார்.

பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ ஆகிய இரு படங்களை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள அருண்குமார் மூன்றாவதாக இயக்கிவரும் படம் ‘சிந்துபாத்’.இப்படத்தில் அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அவரது மகன் சூர்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.

sindhubaadh

சூர்யா நடிப்பது வழக்கம்போல் குட்டிப்பாத்திரம் என்றும் அவர் விஜய் சேதுபதியின் மகனாகவே இப்படத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் நடமாடிக்கொண்டிருக்க, அச்செய்திகளை மறுத்துப் பேட்டி அளித்திருக்கிறார் அருண்குமார்.

sindhubaadh

சூர்யாவை குட்டிப்பையனாக இருந்த காலத்திலிருந்தே எனக்குத் தெரியும். அவரிடம் எதையும் கச்சிதமாகப் பிடித்துக்கொள்ளும் திறமை இருக்கிறது. அதை இப்படத்தில் நிரூபித்தும் விட்டார் அவர். ‘சிந்துபாத்தில் விஜய் சேதுபதியுடன் பயணிக்கும் ஒரு வித்தியாசமான கேரக்டர்.

sindhubaadh

இந்தப் படத்து கதையை எழுத ஆரம்பிக்கும்போதே அந்தக் கேரக்டர்ல சூர்யாவைத்தான் நடிக்க வைக்கணும்ங்குறதுல உறுதியா இருந்தேன். படத்துல பயங்கர தில்லாலங்கடி திருடன் கேரக்டர்ல விஜய் சேதுபதி வர்றார். சூர்யா திருட்டுத் தொழில்ல அவரோட கூட்டாளியா வர்றார். இந்த பார்ட்னர்ஷிப் எப்பிடிப் பட்டயக் கிளப்பியிருக்குன்னு படம் பாக்குறப்போ தெரிஞ்சுக்குவீங்க. விஜய் சேதுபதியை விட அதிக கைதட்டல்களை சூர்யா வாங்குவார்’ என்கிறார் டைரக்டர் அருண்குமார்.

இதையும் வாசிங்க

குளியலறை காட்சி தான் எனக்கு பிடித்த காட்சி: நடிகை சோனியா அகர்வால் ஓபன் டாக்!

2018 TopTamilNews. All rights reserved.