• July
    16
    Tuesday

Main Area

Main



இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி விரைவில் தொடங்கும்? இயக்குநர் சிம்பு தேவன் நம்பிக்கை 

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி
Loading...

சென்னை: இம்சை அரசன் படத்தின் அடுத்த பாகமான இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று இயக்குநர் சிம்புதேவன் கூறியுள்ளார். 

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், வடிவேலு நடிப்பில் வெளியான படம் 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி'. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்த இப்படத்தை இயக்குநர்  சிம்பு தேவன் இயக்கியிருந்தார். 

அதைத்தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாகம் 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' என்கிற பெயரில் செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தடைப்பட்டு ,அதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டன. இந்த நிலையில் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குநர் சிம்பு தேவன் ஒரு படத்தை இயக்கவுள்ளார். 

Dear Friends.. our new journey.. with all your love and support!!
Thanks @vp_offl bro!! 🙏🙏👍@tridentartsoffl and my whole team & friends! 🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/0NJir3FaAV

 

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'உங்கள் அனைவரும் ஆசியால் எனது அடுத்த பயணம் தொடங்கிவிட்டது. கண்டிப்பாக இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் முதலிலிருந்து துவங்கப்படும்' என்று நம்பிக்கையாகக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த வாய்ப்பை வழங்கிய சகோதரர் வெங்கட் பிரபுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.