• May
    21
    Tuesday

Main Areaமரக்கூண்டு சிறை

குற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை!

சிவில், கிரிமினல் வழக்குகள் கூட இந்த பஞ்சாயத்துகளில் தீர்க்கப்படுகின்றன. அங்கே காவல் துறைக்கு அதிக வேலை இல்லையாம்


humansacrifice

மகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி

தன்னுடைய கோயிலுக்கு நிதியுதவி செய்யாத தனது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்திருப்பதாக மந்திரவாதி ஒருவர் கூறியது அதிர்ச்சியடைய செய்துள்ளது
elephant

என்னா அலும்பு!... கோவையை தெறிக்கவிட்ட யானை 'சின்னத்தம்பி'யின் இன்னிங்ஸ் முடிந்தது

கோவையை ஒட்டிய வனப்பகுதியில் கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களை திகிலூட்டி வந்த காட்டு யானை தீவிர முயற்சிக்குப் பின் பிடிபட்டது. chai

'டீ பார்ட்டி'யை கேள்விப்பட்டிருப்பீர்கள்! 'டீ பாட்டி'ன்னா தெரியுமா? 30 ஆண்டுகளாக 'டீ' மட்டுமே அவருக்கு உணவு

கொரியா(சத்தீஸ்கர்) வழக்கமாக காலை, மாலையில் டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். குளிர் காலங்களில் கூடுதலாக ஒரு கப். ஆனால் 30 ஆண்டுகளாக டீ மட்டுமே குடித்து உயிர் வ...

மண்ணில் புதைந்த தமிழனின் வீர விளையாட்டு!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த நூற்றாண்டு வரை இளவேலங்கால் என்றழைக்கப்படும் இளவட்டக் கல் தூக்கும் வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது .

ilavattakal

இவற்றை தூக்கினால்தான்  திருமணத்துக்கு பெண் கொடுப்பார்கள் என்கிற வழக்கமும் அந்த காலத்தில் இருந்துள்ளது.

இதனால் இதற்கு கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உள்ளது. இந்த கல் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும் முழு உருண்டையாக வழவழவென்று எந்தப் பிடிப்பும் இல்லாமல் இருக்கும். இளவட்டக்கல்வைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு. 

முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து லேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும்.

ilavattakal

தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்து கல்லோடு கோயிலை வலம் வருவது குளத்தை வலம் வருவது எனச் சாதனைகளைத் தொடரலாம்.

புதுமாப்பிள்ளைகளுக்கு கருப்பட்டிப் பணியாரம் செய்துகொடுத்து அவரை இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லும் பழக்கம் பண்டைய காலத்தில்  நடைமுறையில் இருந்ததாம்.

தமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கல் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்.

ilavattakal

உடல் வலிமைக்கு சாட்சியாகத் திகழும் இளவட்டக் கல் தூக்கும் நிகழ்ச்சியை பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது .

நாகரீக காலத்தில் இந்த வழக்கம் மறைந்து விட்டாலும் தென் மாவட்டங்களில் இன்னும் சில ஊர்களில் இளவட்டக் கல் சுமக்கும் போட்டி நடத்தப்படுகிறது .

இந்த இளவட்ட கல் தூக்கும் போட்டியில் வென்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. 
 

vijay Thu, 01/03/2019 - 15:53
pongal festival games outdoor games list heroic games pongal games ilavatta kal spiritual ilavattakal சுற்றுலா டிஸ்கவர் இந்தியா

English Title

heroic games Buried in the soil 

News Order

0
2018 TopTamilNews. All rights reserved.