சேலத்தில் ரயிலில் கடத்திவந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது

 
cannabis

ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக ரயிலில் கடத்திவந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் நேற்று சேலம் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, ரயில்வே தனிப்படை போலீசார் பாலமுருகன், சக்திவேல், தமிழ்செல்வன், அருண், ஸ்ரீநாத் ஆகியோர் ரயிலில் ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முன்பதிவு இல்லாத பெட்டியில் சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த பேகை பிரித்து சோதனையிட்டனர். அதில் கஞ்சா கடத்திச்செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் 2 கிலோ அளவிலான 5 பண்டல்களில் இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்ப்டடது.

salem

இவற்றை கடத்தி வந்தது தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த வெள்ளையன்(20), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அருள்பாண்டி(33) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் பிடிபட்ட இருவரும் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு அவர்களிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிச்சென்று சிவகங்கையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.