திருச்சியில் குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த இளம்பெண்... 10 மாத குழந்தை பலி!

 
poison poison

திருச்சியில் குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதில், 10 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார். 

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி குமுதவள்ளி. இவர்களுக்கு வர்ஷா(4) மற்றும் சாஸ்திகா ஸ்ரீ என்ற 10 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, கார்த்திகேயன் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, வாழ்க்கையில் விரக்தியடைந்த குமுதவள்ளி, எலி பேஸ்ட்டை சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் கொடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  சிறிது நேரத்திற்கு பின் வீட்டிற்கு வந்த கார்த்திகேயன், மனைவி  மற்றும் பிள்ளைகள் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார்.

infant

உடனடியாக அவர்களை மீட்டு, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை சஸ்திகா பரிதாபமாக உயிரிழந்தது. குமுதவள்ளி, வர்ஷா ஆகியோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்