திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடமாலை சாத்தப்பட்டு வழிபாடு!

 
kallukuli njaneyar

அனுமன் ஜெயந்தியையொட்டி, திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தியையொட்டி, திருச்சி கல்லுக்குழியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, வண்ண மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு தீபாராதணை நடைபெற்றது. பின்னர், 1 லட்சத்து 8 வடைகளை கொண்டு வடை மாலைகள் மற்றும் 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி மாலைகள் சாற்றப்பட்டும் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் கல்லுக்குழி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

hanuman

இதேபோல், திருவெறும்பூர் ரயில் அடியில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒட்டி அதிகாலை 4.30 மணிக்கு அனுமனுக்கு 48 வகையான மங்கள பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதணையும் நடைபெற்றது. இதனையொட்டி, உற்சவருக்கு பழவகைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுவாமியை தரிசனம் செய்தனர்.