திருச்சியில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஒரே நாளில் 1,331 வழக்குகள் பதிவு!

 
vehicle checkup

திருச்சி மாநகர் பகுதியில் இன்று ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,331 வழக்குகள் பதிவு செய்து, ரூ.12.99 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா உத்தரவின் பேரில், இன்று காலை மாநகர பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வந்தவர்கள், அதிவேகமாக ஓட்டியவர்கள்,  காரில் சீல் பெல்ட் அணியாதது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவர்கள் என ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

trichy

அதன்படி, ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 84 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.8 லட்சத்து 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த 108 நபர்கள் மீது வழக்குப்பதிந்து, ரூ. 1 லட்சத்து 8 ஆயிரம் அபராத தொகையும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்த 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ரூ.9ஆயிரம் அபராதத் தொகையும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கி வந்த 49 நபர்கள் மீது ரூ.49 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, போக்குவரத்து விதிகளை மீறியதாக ஆயிரத்து 331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.12 லட்சத்து 99 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா தெரிவித்துள்ளார்.