நெல்லை அருகே துணிகரம்... தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை!

 
robbery robbery

நெல்லை அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் மேல தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் ராம பிரம்மம். இவர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ராம பிரம்மம் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்க்க குடும்பத்துடன் புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அனைவரும் நேற்று காலை மேல தாழையூத்துக்கு திரும்பி உள்ளனர். அப்போது, அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

police

இதனால் அதிர்ச்சி அடைந்த ராம பிரம்மம் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ராமபிரம்மம் அளித்த புகாரின் அடிப்படையில் தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செயது விசாரித்து வருகின்றனர்.