கன்னியாகுமரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 333 மனுக்கள் பெறப்பட்டன!

 
kumari

கன்னியாகுமரியில் ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 333 மனுக்கள் பெறப்பட்டன. 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 333 மனுக்கள் பெறப்பட்டன. 

kumari

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு, ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவபிரியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருப்பதி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.