வேடசந்தூரில் விபத்தில் சிக்கிய காரில் 335 கிலோ குட்கா பறிமுதல்!

 
dgl dgl

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் விபத்தில் சிக்கிய காரில் கடத்திச்சென்ற ரூ.1.82 லட்சம் மதிப்பிலான  335 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள மாதா ஸ்பின்னிங் மில் அருகே நேற்று திருவனந்தபுரத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் ஈச்சர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று, பெருமாளின் ஈச்சர் வாகனத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த நிலையில், காரில் வந்த 2 நபர்கள் தப்பியோடிய நிலையில், தகவலின் பேரில் வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சோதனையிட்டனர். 

dgl

அப்போது, அதில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, காரில் இருந்த ரூ.1.82 லட்சம் மதிப்பிலான  335 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஈச்சர் ஓட்டுநர் பெருமாள் அளித்த புகாரின் பேரில், போலீசார் கார் உரிமையாளர் சினேகா மற்றும் காரில் இருந்து தப்பியோடிய 2 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.