மதுரை அருகே விற்பனைக்காக பதுக்கிய 41 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது!

 
cannabis

மதுரை அருகே வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 41 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், இதுதொடர்பாக ஒருவரை கைதுசெய்தனர்.

தமிழகம் முழுவதும் ஆபரஷன் 2.0 என்ற பெயரில் கஞ்சா, குட்கா தேடுதல் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்டம் சேடப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சி விற்பனை செய்யப்படுவதாக, மதுரை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சேடப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அல்லிகுண்டம் பகுதியில், தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

madurai

அப்போது, பாலமுருகன் என்பவரது வீட்டின் மாட்டுக் கொட்டகையில் விற்பனை செய்வதற்காக சுமார் 41 கிலா கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், இதுதொடர்பாக பாலமுருகன்(28) பிடித்து, சேடப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு பாலமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், கஞ்சா விற்பனை தொடர்பாக தலைமறைவாக உள்ள உசிலம்பட்டி எருமார்பட்டியை சேர்ந்த கரிகாளை, போத்திராஜ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.