கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது: தனிப்படை போலீசார் தீவிர விசாரணை!

 
cbe blast

கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய 5 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்ற காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து மேற்கொண்ட விசாரணையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பது தெரியவந்தது.  விபத்திற்குள்ளான காரில் ஆணிகள், பால்ரஸ் குண்டுகள், 2 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையி, உக்கடம் ஜிஎம் நகரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

cbe blast

இதனால் அவர் சதி செயலில் ஈடுபட முயன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், அவரது வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் சனிக்கிழமை இரவு 11.25 மணி அளவில் ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 நபர்கள், வீட்டில் இருந்து மர்ம பொருட்களை எடுத்துச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இடிதனை அடுத்து, மற்ற 4 நபர்கள் குறித்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா(25), முகமது அசாருதீன் மற்றும் ஜி.எம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ் ஃபிரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, கோவை மாநகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  உக்கடம், டவுன்ஹால், ரயில் நிலையங்களில் போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரரர்களும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.