5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை- தந்தையின் நண்பர் கைது

 
rape

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே 5 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயன்ற குழந்தையின் தந்தை நண்பரான 54 வயதுடைய நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

rape

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டில் தாத்தாவின் பொறுப்பில் விட்டுவிட்டு பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களது வீட்டிற்கு குழந்தையின் தந்தையின் நண்பரான புதுக்கோட்டை மாவட்டம் எரிச்சியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் பன்னீர்செல்வம் (54)(காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஐடி ப்ரூப் வைத்துள்ளார்) என்பவர் வந்துள்ளார். அப்போது குழந்தையின் தாத்தா தேநீர் கடைக்குச் சென்ற நேரத்தில் தனியாக இருந்த 5 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட பன்னீர்செல்வம் முயன்றிருக்கிறார். பின்னர் வீட்டிற்கு குழந்தையின் தாத்தா திரும்பிவிடவே இயல்பாக பன்னீர்செல்வம் இருந்ததாக காட்டிக் கொண்டுள்ளார்.

பின்னர் குழந்தையின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய உடன் குழந்தை தாய் தந்தையிடம் தனக்கு நடந்ததை கூறியுள்ளது. இதனையடுத்து உடனடியாக கீரமங்கலம் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்களை ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் செய்த போலீசார், இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 5 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற பன்னீர்செல்வத்தை கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஐந்து வயது குழந்தையை தந்தையின் நண்பரே பாலியல் துன்புறுத்தலுக்கு முயன்ற சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.