சேலம் வழியாக ரயிலில் கடத்திச்சென்ற 6 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
slm

சேலம் வழியாக கேரளாவுக்கு செல்லும் ஆலப்புழா விரைவு ரயிலில் கடத்திவந்த 6 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். 

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா விரைவு ரயிலில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திவரப்படுவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று காலை சேலம் ரயில் நிலையத்திற்கு வந்த ஆலப்புழா விரைவு ரயிலில், உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் சாக்குப்பை ஒன்றும், பேக் ஒன்றும் கிடந்தது. இதுகுறித்து அந்த பெட்டியில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அது தங்களுடையது இல்லை என தெரிவித்து விட்டனர்.

salem

இதனால் சந்தேகமடைந்த, ரயில்வே போலீசார் அவற்றை பிரித்து சோதனையிட்டனர். அப்போது, பேக் மற்றும் சாக்குப்பையில் கஞ்சா மறைத்து கடத்திச்சென்றது தெரியவந்தது. அவற்றில் இருந்து சுமார் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அதனை சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு கஞ்சா கடத்தல் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்ட நபரை தீவிரமமாக தேடி வருகின்றனர்.