நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது!

 
arrest

திருநெல்வேலியில் இரு வேறு இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 180 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அரசு மேல்நிலை பள்ளி அருகே கங்கை கொண்டான் காவல் ஆய்வாளர் சீதாலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, பள்ளியின் அருகே சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற 3 இளைஞர்களை பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பேச்சுமுத்து (22), விஜய் அபினாஷ்(20), விக்னேஷ்(21) என்றும், அவர்கள் சட்ட விரோதமாக பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய கஞ்சாவை வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்‌.

nellai

இதேபோல், முன்னீர்பள்ளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கீழ முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே புத்தம்மல்லி காந்திநகரை சேர்ந்த செல்லதுரை(35), மருதம்நகரை சேர்ந்த முத்துசெல்வம்(19), ராஜன்(19) ஆகியோர் சட்ட விரோதமாக கஞ்சாவை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து,  3 பேரையும் செய்த போலீசார், அவர்களிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.