மூலப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கதவடைப்பு போராட்டம்... கோவையில் 60 ஆயிரம் தொழிற் கூடங்கள் மூடல்!

 
msme protest

கோவையில் மூலப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து இன்று ஒருநாள் கதவடைப்பு போராட்டம் காரணமாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இனறு நாடு தழுவிய கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அகில இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
இதன்படி, கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

shops closed

இந்த போராட்டத்தில் கோவை சி.ஆர்.ஐ., டெக்ஸ்மோ, பிரிகால் உள்ளிட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் பங்கேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கோவை சுந்தராபுரம் சிட்கோ, பீளமேடு உள்பட சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும்,  கதவடைப்பு போராட்டம் காரணமாக கோவையில் இன்று சுமார் ரூ.1,500 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக  தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு மூல பொருட்கள் விலையை கண்காணித்து,  நிர்ணயம் செய்ய குழு அமைக்கவும், விலை உயர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறை விலையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், உலோக பொருட்கள் வலியுறுத்தினர்.