ஈரோட்டில் காணாமல் போன ரூ.10 லட்சம் மதிப்பிலான 77 செல்போன்கள் மீட்பு!

 
erode sp

ஈரோடு மாவட்டத்தில் காணாமல் போன ரூ.10 லட்சம் மதிப்பிலான 77 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு, அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் சைபர் க்ரைம் பிரிவு  செய்யப்பட்டு வருகிறது.  மாவட்ட சூப்பிரண்டு சசிமோகன் நேரடி மேற்பார்வையில், சைபர் கிரைம் செயல்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இண்டஸ்கிராம்,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக ஏற்படும் பிரச்சினைகள், வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் மோசடி ஆகியவை குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

erode

இதைப்போல், இங்கு கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் முழுவதும் மாயமான செல்போன்கள் அல்லது திருட்டு போன செல்போன்கள் குறித்து புகார்கள் வந்தது. இந்த இடத்தை சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரூ 10 லட்சம் மதிப்பில் 77  செல்போன்களை கண்டுபிடித்தனர். இந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்கொண்டு, செல்போன்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.