சிவகாசி அருகே துணிகரம்... தனியார் ஆலை உரிமையாளர் வீட்டில் 91 பவுன் நகை கொள்ளை!

 
robbery robbery

சிவகாசி அருகே தனியார் ஆலை உரிமையாளர் வீட்டில் 91 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த அனுப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் செண்பகமூர்த்தி. இவர் பட்டாசு தயாரிப்புக்கு தேவையான கோன் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி புஷ்பம். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் புஷ்பத்தின் தாலிக்கயிறு அறுந்துவிட்டதால், அதனை வீட்டில் இருந்த அலமாரியில் வைத்துள்ளார்.

sivakasi

அந்த நகை திடீரென மாயமாகி உள்ளது. தகவல் அறிந்த செண்பக மூர்த்தி வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது, புஷ்பத்தின் நகை மட்டுமின்றி பீரோவில் வைத்திருந்த 91 பவுன் நகையும் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செண்பக மூர்த்தி இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் பீரோவின் சாவி, அருகில் உள்ள இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பெட்டி உடைக்கப்படாமலேயே பீரோவை திறந்து நகைகளை திருடியது தெரிய வந்தது. இதனால் செண்பக மூர்த்திக்கு நன்கு பழக்கமானவர்களே கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என கருதும் போலீசார், இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த