கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது!

 
python

கோவை மாவட்டம் குப்பேபாளையத்தில் இரவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை மீட்ட வனத்துறையினர், அதனை வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே குப்பேபாளையம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், வனவர் கோபால் தலைமையில் வனத்துறையினர் குப்பேபாளையம் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

python

பின்னர் குடியிருப்பு பகுதிக்குள் மறைந்திருந்த அந்த 10 அடி மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு வனத்துறை வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு  புகுந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.