பஞ்சு குவியலுக்குள் சிக்கி 4 வயது சிறுவன் பலி... திண்டுக்கல் அருகே சோகம்!

 
dead dead

திண்டுக்கல் அருகே தனியார் பஞ்சாலையில் பஞ்சு குவியலில் விளையாடிய 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயராஜ் - காளீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு தமிழ்செல்வி (7), சுந்தர் (4) என 2 குழந்தைகளும் உள்ளனர். ஜெயராஜ், தனது குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டி பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலையில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று குழந்தைகள் தமிழ்செல்வி, சுந்தர் ஆகியோர், ஆலையில் உள்ள பஞ்சு குவியலில் விளையாடி கொண்டிருந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக பஞ்சுகளுக்கு இடையே சிறுவன் சிக்கி கொண்டுள்ளான். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். 

dgl gh

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள். குழந்தை சுந்தரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுந்தர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.