குமரி அருகே மிளாவை வேட்டையாடிய ஒருவர் கைது... இறைச்சியை பங்கிட்டுகொண்ட 12 பேருக்கு அபராதம் விதிப்பு!

 
deer hunting

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே மிளாவை வேட்டையாடி இறைச்சியை பங்கிட்ட நபரை கைது செய்த வனத்துறையினர் அவரிடம் இருந்து 

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி ஆலடிவிளை பகுதியில் சிலர் மிளாவை வேட்டையாடி, இறைச்சியை பங்கிட்டு கொள்வதாக நேற்று வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஆரல்வாய்மொழி வனவர் பாலசந்திரிக்கா தலைமையில் வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், மயிலாடி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த லிங்கம் என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, அவரது வீட்டில் மிளா இறைச்சி, தோல் மற்றும் 2 தலைகள் இருப்பது தெரியவந்தது.

arrest

இதனை அடுத்து, லிங்கத்தை பிடித்து வனத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெருமாள்புரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலத்தில், செல்வராஜ் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து, 2 மிளாக்களை வேட்டையாடியதும், பின்னர் அதன் இறைச்சியை அவர்கள் பங்கிட்டு கொண்டதும் தெரியவந்தது. அத்துடன், மிளா இறைச்சியை 6 பேருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, லிங்கத்தை கைது செய்த வனத்துறையினர், மிளாவை வேட்டையாடி 6 பேருக்கும், இறைச்சியை வாங்கிய 6 பேருக்கும் என 12 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மிளா இறைச்சி, தோல், 2 தலைகள், வேட்டைக்கு பயன்படுத்திய கருவிகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.