பேரணாம்பட்டு அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது; ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்!

 
pernampattu pernampattu

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி ஆய்வாளர்கள் தேவபிரசாத், இளங்கோவன் தலைமையிலான போலீசார்,பேரணாம்பட்டு வி.கோட்டா சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

arrest

அப்போது, அவர் வி.கோட்டா சாலை பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் வல்லதாரசு என்பதும், அவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, வல்லதாரசு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.