முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, திருச்சியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

 
trichy trichy

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து திருச்சி அண்ணாசாலை பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி, எஸ்.வளர்மதி, அதிமுக முன்னாள் எம்.பி., ப.குமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

admk

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சென்னையில் நகர்ப்பற உள்ளாட்சி தேர்தலின் பேரில் கள்ளஓட்டு செலுத்த முயன்ற நபரை, ஜனநாயகத்தை பாதுகாக்க முயற்சிக்கும் விதமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது, திமுக அரசு பொய்யான வழக்கை போட்டு பழிவாங்கும் நடவடிக்கையாக அவரை கைதுசெய்துள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும், ஜெயக்குமாரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.