மதுரை பெண்கள் சிறையில் மனநல ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
madurai prison

மதுரை பெண்கள் தனிச்சிறையில் காலியாக உள்ள தற்காலிக மனநல ஆலோசகர் பணிக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என  அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக சிறை நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - மதுரை பெண்கள் தனிச்சிறையில் தற்காலிக மனநல ஆலோசகர் (பெண்) (Counsellor) பணியிடம் ஒன்று புதிதாக தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. இப்பணியிடம் பொதுப் போட்டி (முன்னுரிமை அற்றவருக்கு) ஒதுக்கப்பட்டதாகும். தற்காலிக மனநல ஆலோசகர் (பெண்) (Counsellor) பணியிடத்திற்கு 01.05.2022 அன்றைய நிலையில் குறைந்த பட்சம் வயது தகுதி 18 ஆகவும், அதிக பட்ச வயது (OC-32, BC & MBC - 34, SC & ST, SCA -37) ஆகவும் உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை. தற்காலிக மனநல ஆலோசகர் (பெண்) (Counsellor) பதவிக்கு அரசாணையின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதி கீழ்கண்டவாறு

Qualification - Master Degree in Socialogy/ Psychology / Social Work

Experience - Councsell experience in Mental Health Institution or Community Service

jobs

இப்பதவிக்கு தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.15,000 வழங்கப்படும்,(Contract Basis Pay Rs.15000/- per month). தகுதியுள்ள நபர்கள் தங்களது கல்விச்சான்று, ஜாதிச்சான்று மற்றும் மேற்படி பணியிடம் தொடர்பான பயிற்சி பெற்று சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தினை சிறைக்கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, மதுரை - 16 என்ற முகவரிக்கு 28.12.2022க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.