அரியலூர் மாவட்டத்தில் தடகள பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
collector ariyalur

அரியலூர் மாவட்டத்தில் தேசிய அளவில் பதக்கம் வென்ற தடகள வீரர், வீராங்கனைகள் பகுதி நேர பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (Khelo India) திட்ட நிதியதவியில் துவக்க நிலை தடகளம் பயிற்சிக்கான SDAT - விளையாடு இந்தியா மாவட்ட மையம் அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்படவுள்ளது. விளையாடு இந்தியா, மாவட்ட மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி குறித்த முக்கிய விவரங்கள் :- தேசிய அளவில் சாதனைபடைத்த 40 வயதிற்குட்பட்ட தடகளம் வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.  விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளாகவும், தற்போது அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.   தடகளம் விளையாட்டில் சர்வதேச போட்டிகள் (அல்லது) தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ (அல்லது) அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேச போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக ரூ.18,000/- வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தர பணியோ கோர இயலாது.

jobs
விண்ணப்பிக்கும் முறை :- இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 03.01.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை: - உடற் தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய அலுவலர்:- மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அரியலூர் அவர்களை தொலைபேசி எண்.7401703499 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே அரியலூர் மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த தடகளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு, ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.