ஆத்தூர் வட்டத்தில் 4 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
jobs

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என வட்டாட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் 2021ஆம் ஆண்டு காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதி உடைய நபர்கள் வரும் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தமிழக அரசின் இணையதளம் https://www.tn.gov.in, வருவாய் நிர்வாகத்துறை இணையதளம் https://cra.tn.gov.in மற்றும் https://dindigul.nic.in/ ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்களின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், கல்வி தகுதி 5ஆம் வகுப்பு தேச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 01.07.2022 அன்று அனைத்து வகுப்பினர்களும் குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 32 ஆண்டுகள், இதர வகுப்பினருக்கு அதிகபட்சம் 37 ஆண்டுகள் இருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி நாளது பதிவு தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

dindigul

காலியிட கிராமங்கள் விவரம் -  1.வீரக்கல் - எஸ்.சி (பெண்கள் ஆதரவற்ற விதவைக்காக ஒதுக்கப்பட்டது), 2. வடக்கம்பட்டி - எம்பிசி / டிஎன்சி (பொது) முன்னுரிமையற்றவர். 3. பாளையங்கோட்டை - பிசி (பிற்பட்ட வகுப்பினர் முஸ்லீம் நீங்கலாக) (பொது) முன்னுரிமையற்றவர். 4. பாறைப்பட்டி - பிசி முஸ்லீம் (பொது) கொரோனா தொற்றினாலோ அல்லது இதர காரணங்களினாலோ பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் (மகன் / மகள் ) முன்னுரிமை.

பணியிடம் காலியாக உள்ள கிராமம், 2 கி.மீ சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும், இல்லாத நிலையில் குறுவட்ட அளவிலும்,  குறுவட்ட அளவிலும் தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள ஆத்துர் வட்டத்தை சேர்ந்த வட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும் என ஆத்துர் வட்டாட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.