அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 318 மனுக்கள் பெறப்பட்டன!

 
ariyalur

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 318 மனுக்கள் பெறப்பட்டன.

அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.இந்த முகாமில் சாலை வசதி, குடிநீர் வசதி, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 318 மனுக்கள் பெறப்பட்டன.

Ariyalur

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.