பெருந்துறை அரசுப்பள்ளியில் கலைத் திருவிழா: போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கிய எம்எல்ஏ ஜெயக்குமார்!

 
peru

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவ - மாணவிகளின் கலைத்திறனை, படைப்பாற்றலை வெளிக்காட்டும் விதமாக கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த திருவிழாவில் பெருந்துறை வட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு, தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். 

peru

விழாவின் நிறைவு நாளான இன்று போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இதில், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு, வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கும், பள்ளி ஆசிரியர்களைளுக்கும் கேடயங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். வட்டார அளவில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் 2 இடம் பெறுவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளனர். மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலிடம் பெறும் தனிநபர் மற்றும் குழுக்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க முடியும். 

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நடைபெறும் இந்த கலைத் திருவிழாவின் இறுதிப்போட்டி 2023 ஜனவரி முதல் வாரம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கல்யாணசுந்தரம், கருவண்டு செல்லிபாளையம் பேரூர் அதிமுக செயலாளர் கேஎம் பழனிசாமி, கல்வி அறக்கட்டளை குழு தலைவர் பல்லவி பரமசிவம், அதிமுக மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.