75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி!

 
erode

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் அஞ்சல் துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டையும், தேச ஒற்றுமை குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறன. அதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் நேற்று  அஞ்சல் துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனையொட்டி, ஈரோடு காந்திஜி சாலையில் நடந்த நிகழ்ச்சியில் அஞ்சல் துறை ஊழியர்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

erode

தொடர்ந்து, அவர்கள்  மூவர்ண கொடி ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, தேசிய மாணவர் படை பேண்ட் குழுவினருடன் ஊர்வலமாக சென்றனர். காந்திஜி சாலையில் புறப்பட்ட இந்த பேரணி, அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் சென்று நிறைவடைந்தது.