"பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என பொய்யான பரப்புரை செய்கின்றனர்"... ஈரோடு தெற்கு மாவட்ட பாஜகவினர் குற்றச்சாட்டு!

 
erode

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சிறுபான்மை அணி தலைவர் மைக்கேல் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:- பாஜக-வில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அதிகளவில் இணைந்து வருகின்றனர். பாஜக தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல சாதனைகள் செய்து இந்தியாவை வளர்ச்சி பாதையில் வல்லரசு நாடாக மாற்றும் வகையில் சாதனை படைத்திருக்கிறது. பாஜக கட்சி குறித்து திமுக பொய்யான மூளை சலவை செய்து வருகிறது. இதை களைய சிறுபான்மை அணி முக்கிய பங்காற்றி வருகிறது. சிறுபான்மை மற்றும் பழங்குடியினரை மையமாக கொண்ட பல நலத்திட்டங்களை முன்னிலை படுத்தி வருகிறது. 

bjp

மத்தியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையலான கூட்டணி  ஆட்சி இருந்தபோது தமிழகத்தில் 7 பேர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். அதில் ஒருவர் கூட கிறிஸ்தவர் இல்லை. ஆனால் கேரளாவில் எம்பி இல்லாதபோதும் ஒரு கிருஸ்தவர், மத்திய அமைச்சராக்கினார் மோடி. கோவா போன்ற மாநிலங்களில் பாஜக-வில்  கிறிஸ்தவர்கள் பலர் எம்.எல்.ஏ-வாக,  அமைச்சர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் பாஜக சிறுபான்மையனகுக்கு எதிரான கட்சி என்பது பொய் பிரச்சாரம் என்பதை  சிறுபான்மையானர் தெளிவாக உணர்ந்துள்ளனர்ன, என அவர் தெரிவித்தார்.  இதில் முன்னாள் சிறுபான்மை அணி தலைவர் கலிபுல்லா, துணை தலைவர் காஜாரஷித்கான், பொருளாளர் பிரவின் குமார், பொதுச் செயலாளர் மணிகண்டன்,  ஐ.டி டேட்டா மேனேஜ்மெண்ட் செந்தில் , ஊடகத்துறை பிரிவு அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.