மேட்டுப்பாளையத்தில் சாலையில் உலா வந்த பாகுபலி யானையால் வாகனஓட்டிகள் அச்சம்!

 
bahubali

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பாகுபலி யானை ஒய்யாரமாக நடந்து சென்றதால், அந்த வழியாக சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை காட்டு யானை பாகுபலி சுற்றித்திரிந்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் அந்த யானை, அங்குள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனால் பாகுபலி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, ஓடந்துறை பகுதியில் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில்  ஒய்யாரமாக நடந்து சென்றது.

bahubali

அந்த பகுதி மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட யானை என்பதால் பொதுமக்கள் எந்த வித அச்சமும் இன்றி யானையை பார்த்துக்கொண்டிருந்தனர். எனினும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்தில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியும், ஹார்ன் ஒலியை எலிப்பிய படியும் நகர்ந்து சென்றன.  அப்போது, சாலையின் அருகே உள்ள தோட்டத்து இரும்புக்கதவை சேதப்படுத்திய பாகுபலி யானை, சிறிது நேரத்திற்கு பின் வனப்பகுதிக்குள் புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இயக்கிச்சென்றனர்.