நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு ஜுலை 9ல் இடைத்தேர்தல்!

 
namakkal

நாமக்கல் மாவட்டம் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 16 இடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் ஜுலை 9ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - நாமக்கல் மாவட்டத்தில் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.4.22 வரை காலியாக உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி உறுப்பினர் வார்டு எண்.8 கபிலர் மலை ஊராட்சி ஒன்றியக்குழு 4-வது வார்டு உறுப்பினர், நாமகிரிபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், எலச்சிபாளையம் இளநகர் ஊராட்சி 2-வது வார்டு மற்றும் மாவுரெட்டிபட்டி ஊராட்சி 2-வது வார்டு, எருமப்பட்டி வடவத்தூர் ஊராட்சி 2-வது வார்டு, கபிலர் மலை சிறுநல்லிகோயில் ஊராட்சி 3-வது வார்டு, மோகனுர் ராசிபாளையம் ஊராட்சி 9-வது வார்டு, நாமகிரிபேட்டை மத்துருட்டு ஊராட்சி 5-வது வார்டு, பள்ளிபாளையம் ஒடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி 3-வது வார்டு மற்றும் தட்டாங்குட்டை ஊராட்சி 11-வது வார்டு, பரமத்தி செருக்கலை ஊராட்சி 9வது வார்டு மற்றும் புதுச்சத்திரம் கதிராநல்லூர் ஊராட்சி 1வது வார்டு, ராசிபுரம் மோளபாளையம் ஊராட்சி 8-வது வார்டு, சேந்தமங்கலம்  கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி 8-வது வார்டு, திருச்செங்கோடு சிறுமொளசி ஊராட்சி 4-வது வார்டு உள்ளிட்ட 16 காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான இடைத்தேர்தலுக்கான திட்ட அறிவிக்கை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் பின்வருமாறு வெளியிடப்பட்டு உள்ளது.

election

வேட்புமனு தாக்கல் தொங்கும் நாள் - 20.6.22; வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - 27.06.22; வேட்புமனுக்கள் கூர்ந்தாய்வு நாள் - 28.6.22; வேட்புமனுக்கள் திரும்ப பெறும் நாள் - 30.06.22; தேர்தல் நடைபெறும் நாள் - 09.07.22; வாக்கு எண்ணிக்கை நாள் - 12.07.22; தேர்தல் பணிகள் முடிவடையும் நாள் - 14.07.22-க்கு முன்னர். இதையொட்டி, தேர்தலுக்கான நடத்தை விதிகள், தேர்தல் நடைபெறும் பிள்ளாநல்லூர் பேரூராட்சி முழுவதும், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் முழுவதும் மற்றும் 13 கிராம ஊராட்சிகள் முழுவதும் 18.06.22 முதல் 14.07.22 வரை நடைமுறையில் இருக்கும்.

மேற்படி பகுதிகளின் பொதுஇடங்களில் வேட்பாளரின் பெயரிலோ, கட்சிகளின் பெயரிலோ மற்றும் அதன் தொடர்பான அனைத்து விதமான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்வித விளம்பர போஸ்டர்கள், விளம்பர பேனர்கள், விளம்பர படங்கள் இருப்பின் அவற்றை நீக்கவும், அரசுக்கட்டிடம் / தனியார் கட்டிட சுவர்களில் வேட்பாளர்கள் பெயரோ, கட்சிகள் பெயரோ அல்லது அதன் தொடர்பான வாசகங்கள் வண்ணப்பூச்சுக்களால் எழுதப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என சம்பந்தபட்ட கட்சி, போட்டியிடும் வேட்பாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.