திருப்பூர் மாவட்டத்தில் திருடுபோன ரூ.2.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு!

 
tiruppur

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் திருட்டு மற்றும் காணாமல் போன ரூ.2.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்ட சைபர் கிரைம் போலீசார்,  அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். 

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போனது தொடா்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. சஷாங்க் சாய் உத்தரவின் பேரில், சைபா் கிரைம் பிரிவு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு திருட்டு மற்றும் காணாமல் போன சுமார்  ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 47 செல்போன்களை மீட்டனர்.

tiruppur

தொடர்ந்து, மீட்கப்பட்ட செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கும் பொருட்டு, நேற்று அனைவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு திருப்பூா் மாவட்ட எஸ்பி சஷாங்க் சாய்,  செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தாா். இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்ட சைபா் கிரைம் ஏடிஎஸ்பி கிருஷ்ணசாமி, காவல் ஆய்வாளா் சித்ராதேவி, உதவி ஆய்வாளா் ரோஸ்லின் அந்தோனியம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.