முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் ராணுவ அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - தேனி ஆட்சியர்!

 
theni collector

தேனி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் ராணுவத்தில் அலுவலர் பணியில் சேர்ந்திட போட்டித்தேர்வுக்கு வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவத்தில் அலுவலராக பணியில் சேர்ந்திட UPSC ஆல் நடத்தப்படும் COMBINED DEFENCE SERVICES EXAMINATION - 1 2023, 16.04.2023 அன்று தேர்வு நடைபெற உள்ளது. இப்பணியில் சேர விருப்பமும் தகுதியுமுள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்கள்  http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே 10.01.2023-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறும்.

army

விண்ணப்பித்த விவரத்தை உடன் தேனி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் எழுத்து மூலம் தெரிவிக்குமாறும். மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு தேனி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலக 04546 - 252185 என்ற எண்ணத்தை தொடர்பு கொள்ளுமாறு, ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.