கோவையில் பிரேக் பிடிக்காமல் சென்ற லாரி மோதி ஓட்டுநர் பலி!

 
dead

கோவை அருகே லாரி ஓட்டுர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், பிரேக் பிடிக்காமல் சென்ற லாரியை நிறுத்த முற்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் அவர் பலியானது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. 

கோவை அன்னூர் சாலையில் உள்ள கடுவேட்டிபாளையம் பகுதியில் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்த நபர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ்பாபு என தெரிய வந்தது. இவர் கடந்த 17ஆம் தேதி சேலத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம் கருமத்தப்பட்டி கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் குடோனுக்கு சென்றதும் தெரிய வந்தது.

coimbatore gh

இந்த நிலையில், கடுவேட்டிபாளையம் பகுதியில் அவர் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசேததனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சுரேஷ்பாபு அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சம்பவ இடத்தில் உள்ள பெட்ரோல் பங்க் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சுரேஷ்பாபு லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, முன்புறம் நின்று சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அப்போது, ஹேண்ட் பிரேக் போடாததால் லாரி தன்னிச்சையாக முன்னோக்கி நகர தொடங்கிய நிலையில், இதனை கண்ட சுரேஷ்பாபு முன்புறம் தள்ளி நிறுத்த முற்பட்டுள்ளார். அப்போது, லாரி பள்ளத்தில் இறங்கிய நிலையில், அதன் அடியில் சிக்கி சுரேஷ்பாபு உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலிசாலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.