திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்த ஆட்சியர்!

 
tvr

திருவாரூர் மாவட்டம் களப்பால் மற்றும் இடும்பாவனம் பகுதிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டு 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் ஊர்தியை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்,  திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி வட்டம், களப்பால் மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டம் இடும்பாவனம் ஆகிய 2  பகுதிகளுக்கும் 2 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் ஊர்தி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டதாக கூறினார்.

tvr

மேலும்,  திருவாரூர் மாவட்டத்தில் இவ்விரண்டு வாகனங்களையும் சேர்த்து மொத்தம் இருபது 108 ஆம்புலன்ஸ் ஊர்திகள் மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் தொகுதி எம்எல்ஏ பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து, கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் ஊர்தி மருத்துவ உதவியாளர் வள்ளி என்பவர் உயிரிழந்தமையால், அவரது வாரிசு தாரருக்கு  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.5 லட்சத்திற்கான  காசோலை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.