ஈரோடு - பழனி ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாமக ஆர்ப்பாட்டம்!

 
பாமக

ஈரோடு - பழனி இடையிலான ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி, ஈரோடு ரயில் நிலையத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு - தாரபுரம்- பழனி இடையிலான 91 கிலோ மீட்டர் புதிய இருப்பு பாதை திட்டம் ரூ.149 கோடி திட்ட மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த திட்டம் கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு - பழனி ரயில்வே இருப்புப் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஈரோட்டில் பாமக சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு ரயில் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் முன்னால் மாநில துணை பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார்.

பாமக

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.  மேலும், இந்த திட்டம் மூலம் பழனி ஆன்மீக திருத்தலம் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியும் என்றும், எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் பரமசிவம், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சேக் முகைதீன், மத்திய மாவட்ட செயலாளர் பிரபு, மாநகரச் செயலாளர் ராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் ராசு உட்பட கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பலரும் இதில் கலந்து கொண்டனர்.