அல்லேரி மலைப்பகுதியில் 1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு... மதுவிலக்குப்பிரிவு போலீசார் அதிரடி!

 
illicit arrack

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை மதுவிலக்குப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலைப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி. ராஜேஸ்கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் பேபி தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் அல்லேரி மலைப் பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

illicit arrack

அப்போது, 3 இடங்களில் நிலத்திற்கு அடியில் பேரல்களில் கள்ளச்சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3 இடங்களில் இருந்தும் சுமார் 1000 லிட்டர் அளவிலான கள்ளச்சாராய ஊறல்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், சாராயம் காய்ச்ச வைத்திருந்த மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து மதுவிலக்குப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சாராய வியாபாரிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.